April 21, 2018
தண்டோரா குழு
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காஷ்மீரில் கத்துவா,உத்தரப் பிரதேசம் உன்னாவ் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும்,பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இதற்கு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.