• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவையில் பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

April 21, 2018 தண்டோரா குழு

சமூக வலை தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தும் கைது செய்யாத காவல் துறையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் இன்று(ஏப் 21)காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பத்திரிக்கையாளரைச் சந்தித்தார்.அப்போது பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலாளிக்காமல் கன்னத்தில் தட்டியுள்ளார். இது குறித்து பெண் நிருபர் ஆளுநரின் செயல் அருவருக்கத்தக்க ஒன்று என டிவிட் செய்ததை ஒட்டி , அப்பெண்ணிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில் முகநூலில் நடிகர் எஸ்.வி.சேகர் பெண் நிருபரை ஒருமையில் பேசியதோடு,பெரிய ஆட்களுடன் தனிமையில் இருக்காமல், நிருபராகவோ,செய்தி வாசிப்பாளராகவோ வர முடியாது என ஆபாசமான வார்த்தைகளால் பதிவிட்டு இருப்பது, பெண்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஒட்டு மொத்த மீடியாக்களும் கிரிமினல், பொறுக்கிகளின் பிளாக்மெயில் பேர் வழிகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதாக பதிவிட்டதை கண்டித்து எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிய சொல்லி நேற்று கோவை பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் நிருபர்கள் மூன்று பேர் புகாரளித்திருந்தனர்.

இந்நிலையில் மாநகர ஆணையாளர் உடனடியாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க