April 21, 2018
தண்டோரா குழு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான 17வது லீக் போட்டியில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.சென்னை அணியின் இந்த வெற்றிக்கு, பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“யாதும் ஊரே யாவரும் கேளீரென்ற” வரிக்கேற்ப, தானே புயலைப்போல் பூனேவில் மைய்யங்கொண்ட என் தமிழ் ரத்தங்களே , கண்டங்கடந்து தனக்கான இடமடையும் சிறகுகளைப் போல, உங்களின் அன்பு கண்டு மொத்த @ChennaiIPL அணியும் சில்லாய்த்தது.நமது வெற்றியை கொண்டாடுங்கள்.சிங்க பாய்ச்சல் @ShaneRWatson33 என பதிவிட்டுள்ளார்”.