April 20, 2018
தண்டோரா குழு
முதல் முறையாக இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது.இதனையடுத்து 32 மாவட்டங்களில் 44 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் தங்களுடைய வீடுகளில் இருந்தோ அல்லது அந்தந்த மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு சென்றோ விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுக்கலாம்.
மேலும்,கலந்தாய்வின் ஒவ்வொரு கட்டமும்,குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மாணவர்களுக்கு அனுப்பப்படும்.அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு தேதி அடுத்த வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.