April 20, 2018
தண்டோரா குழு
பிறந்தநாளன்றும் மாநில உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி,தனது பிறந்தநாளான ஏப் 20-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதையடுத்து,நீதிக்கான போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சந்திரபாபுநாயுடு அமைச்சரவையை சேர்ந்த 13 பேர் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் போராட்டதை நடத்துகின்றனர்.மற்ற அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,பிறந்தநாளன்றும் மாநில உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“உங்கள் பிறந்த நாளன்று,உங்கள் மாநிலத்தின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் … வழக்கம் போல “இன்று போல என்றும் வாழ்க” என வாழ்த்துவது முறையாகாது.எனினும் நாட்டிற்கு உங்கள் மாநிலம் அளித்த முதலீட்டில்,உரிய பங்கைத் திரும்பக் கேட்கும் உங்கள் போராட்டம் வெல்லட்டும் எனக் கூறியுள்ளார்”.