• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எச்.ராஜா விமர்சனத்திற்கு தமிழிசை மனவேதனை

April 18, 2018 தண்டோரா குழு

எச்.ராஜா விமர்சனம் தனக்கு மிகுந்த மனவேதனையை தருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விஸ்வரூபம் எடுத்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பத்திரிகையாளர்கள் சந்தித்தார். அப்போது,பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் கன்னத்தில் தட்டிய விவகாரம் தற்போது கடும் சர்ச்சையைக் கிளப்பியது.இதற்கு கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில்,தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிரூபர்கள் கேள்வி கேட்பார்களா?மாட்டார்களா?சிதம்பரம் உதயகுமார்,அண்ணாநகர் ரமேஷ்,பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார்.இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து வருகின்றனர்.இந்நிலையில்,எச்.ராஜா விமர்சனம் தனக்கு மிகுந்த மனவேதனையை தருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது”. எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க