• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்மலாதேவி யாரென்றே எனக்கு தெரியாது; அவரை நான் பார்த்ததே இல்லை – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

April 17, 2018 தண்டோரா குழு

நிர்மலாதேவி யாரென்றே எனக்கு தெரியாது; அவரை நான் பார்த்ததே இல்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னைகிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“தமிழக ஆளுநராக பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவு செய்துள்ளேன்.பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான செய்திகளை பார்த்தேன்.மாணவர்களை பேராசிரியர் தவறாக வழிநடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.விசாரணை ஆணையம் அமைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. விசாரணை அதிகாரி சந்தானம் சமர்பிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். என்னுடன் கலந்து ஆலோசிக்காமல் பல்கலை குழு அமைத்தது.இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்;யாரும் கவலைப்பட தேவையில்லை.

என் மீது வைக்கபடும் குற்றசாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதரமற்றவை.நிர்மலா தேவியை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லை.நான் நிர்மலா தேவி முகத்தை கூட இதுவரை பார்த்தது இல்லை.எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது.எனக்கு 78 வயதகிறது எனக்கு கொள்ளுபேரன்,பேத்திகள் உள்ளனர்.என் மீது இந்த மாதிரியான தவறான குற்றச்சாட்டை யாரும் கூற முடியாது.பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே சி.பி.ஐ விசாரணை குறித்தெல்லாம் முடிவு செய்ய முடியும். ஆனால், ஆனால் தற்போதுசிபிஐ விசாரணை தற்போதைக்கு தேவையில்லை. தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடப்படும்.

இந்த விவகாரத்தில் சட்டவிதிகளின்படியே, சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.நிர்மலாதேவி விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். காவல்துறையினர் அவர்களின் வேலையை செய்யட்டும்.பல்கலைக்கழக செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருகிறேன்.வேந்தர் மாநில அரசையோ,அமைச்சர்களையோ கலந்து முடிவெடுக்க அவசியம் இல்லை.பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது.அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரே மாநிலத்தின் தலைவர்.நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்”. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க