• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்” – அமைச்சர் ஜெயக்குமார்

April 16, 2018 தண்டோரா குழு

“பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், விருதுநகரில் கல்லூரி பேராசிரியை கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யபட்டார். இதையடுத்து, இந்த ஆசிரியையை கைது செய்ய கோரி கல்லூரி முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என ஆவேசமாக கூறினார். மேலும், மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். பேராசிரியர் நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று தேசத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும். மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்லும் பேராசிரியை நிர்மலாவின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் அதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.

மேலும் படிக்க