April 13, 2018
தண்டோரா குழு
பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது குற்றவாளிகள் யாரும் காப்பற்றப்பட மாட்டார்கள் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமியை போலீசார் உட்பட 8 பேர் வன்கொடுமை செய்து கொலை செய்தனர்.அதைபோல் உ.பி.,மாநிலம் உனா பகுதியிலும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். அவருடன் பிரியங்கா, ராபர்ட் வாத்ரா, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில்,ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் டுவிட்டரில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியிருந்தார்.சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, நாளை(ஏப்.,14) கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் தலைநகர் டில்லியில் அம்பேத்கர் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“நாகரிமான சமுதாயம் கொண்ட நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வெட்கக்கேடானவை. நமது மகள்களுக்கு இழைக்கப்பட்ட சம்பவத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. குற்றவாளிகள் யாரும் காப்பற்றப்பட மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன் எனக் கூறினார்”.