• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இசைஞானியை முந்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

April 13, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் முக்கிய இசைமைப்பாளர்கள் என்றால் இசைஞானி இளையராஜா,இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் என்றே சொல்லாம்.இதில் ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளார்.எனினும்,தேசிய விருதை ஏ.ஆர் ரஹ்மானை விட இளையராஜா தான் அதிகம் பெற்றிருந்தார்.

இந்நிலையில்,65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.ஆஸ்கார் விருதில் தன் இசைக்காக இரண்டு விருதுகளை இந்தியாவிற்கு அள்ளி வந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது மீண்டுமொரு சாதனையை தன் வசமாக்கியுள்ளார். ஆம்!இரண்டு தேசிய விருதுகளை ஒரே நேரத்தில் பெற்றுள்ளார். தேசிய விருதுகள் வரலாற்றில் இப்படி ஒரே சமயத்தில் இரண்டு விருதுகளை பெறுவது இதுவே முதல்முறை.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இதற்கு முன் ரோஜா,மின்சாரக் கனவு,லகான்,கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார்.தற்போது மாம்,மற்றும் காற்று வெளியிடை படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.இதன் மூலம் இசைப்புயல் மொத்தம் 6 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.இதற்கு முன் 5 தேசிய விருதுகளைப் பெற்ற இசைஞானி இளையராஜாவே முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க