• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

April 13, 2018 தண்டோரா குழு

கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்,பல்வேறு பகுதிகளில் பதாகைகளை ஏந்தி இன்று(ஏப் 13)விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அனைவருக்கும் கல்வி கிடக்கக வேண்டும் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்துடன் அது குறித்து பதாகைகளுடன் கோவையில் உள்ள உக்கடம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சாலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும்,அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து கல்வி அறிவை வழங்க வேண்டும் எனவும், அதுவே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

மேலும் படிக்க