• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ஜஸ்டிஸ் பார் ஆசிஃபா’டுவிட்டரில் கொந்தளிக்கும் பிரபலங்கள்

April 13, 2018 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் ஆசிபா என்ற 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அந்த சிறுமியை கோவிலுக்குள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சிறுவன்,அரசு ஊழியர் உள்பட 7 பேர் மயக்க மருத்து கொடுத்து 3 நாட்கள் தொடர்ந்து வன்புணர்வு செய்துள்ளனர்.இறுதியில் அந்த சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரைத்துறை பிரபலங்களும் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து “ஜஸ்டிஸ் பார் ஆசிஃபா”#JusticeForAsifa என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க