• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை துடியலூர் அருகே அரசு விரைவு பேருந்து – டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து

April 13, 2018

கோவை துடியலூர் அருகே அரசு விரைவு பேருந்தும், டெம்போவும் நேருக்கு நேர் மோதியதில் டெம்போ டிரைவர் பலியானார்,10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

கோவை துடியலூர் அருகிலுள்ள வெள்ளகிணர் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டு இருந்தது.அப்போது கோவையில் இருந்து வந்து கொண்டு இருந்த இரண்டு சக்கர வாகன ஓட்டி திடீரென வெள்ளகிணர் பிரிவு அருகில் வலது புரம் செல்லுவதற்காக திரும்பியுள்ளார்.இதனால் எதிரில் வந்த அரசு பேருந்தின் டிரைவர் இரண்டு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க அவரும் பேருந்து வந்த வேகத்தில் வலது புரம் திருப்பியுள்ளதாக தெரிகிறது.

அப்போது கோவையில் இருந்து துடியலூருக்கு சிமெண்ட் மண் ஏற்றி சென்று கொண்டு இருந்து டெம்போ மீது பேருந்து மோதியது. இந்த மோதலில் இரண்டு வாகனமும் பலத்த சேதமடைந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த டெம்போ டிரைவர் பாண்டித்துரையை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டித்துரை இறந்துவிட்டார்.

மேலும் படிக்க