April 12, 2018
தண்டோரா குழு
அமைதிப் பூங்காவில் கொஞ்சம் புயல்! நீதிக்காக வீதி வந்திருக்கிறோம் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பிலும் கண்டங்கள் எழுந்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றது.இதனால் தமிழகம் போரட்டக்களமாக மாறியுள்ளது.இந்நிலையில் நடிகர் விவேக் போராட்டங்கள் குறித்து டுவீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,
அமைதிப் பூங்காவில் கொஞ்சம் புயல்!நீதிக்காக வீதி வந்திருக்கிறோம்.விரைவில் பூங்காற்று திரும்பும்.பொதுவாக கன்னட மக்கள் அன்பானவர்கள்.அவர்கள் வீட்டு சாம்பாரே இனிக்கும்.இது பல நாள் அரசியல்.கடினம் கடப்போம்;மனிதம் படைப்போம் எனக் கூறியுள்ளார்.