April 12, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சி துவக்க விழாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடி நிகழ்ச்சியை இன்று(ஏப் 12)தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை முடித்து டெல்லி புறப்பட்ட பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை மனுவை அளித்தார்.அதில்,உச்சநீதிமன்ற தீர்ப்பை காவிரி மேலாண்மை வாரியத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும், அனைத்து அதிகாரம் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என்றும்,அடுத்த பருவ காலம் ஜூன் 1ம் தேதி தொடங்கவுள்ளதால்,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.