April 12, 2018
தண்டோரா குழு
கறுப்பு என்பது சர்வதேச மொழி இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றது.காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாக பல்வேறு பொதுமக்களும்,எதிர்கட்சிகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் இன்று திருவிடந்தை ராணுவ தளவாடக் கண்காட்சியின் துவக்க விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பொதுமக்களும்,எதிர்கட்சிகளும் கறுப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து,
கறுப்பு என்பது சர்வதேச மொழி இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும்.காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள்.அது கர்நாடகத்துக்கு அநீதி அல்ல;தமிழ்நாட்டுக்கு நீதி. என்று கூறியுள்ளார்.