April 12, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றது.இந்நிலையில்,தமிழகத்தில் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிராக கன்னட அமைப்பான கன்னட சலுவளி வாட்டாள் என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஏப்ரல் 16ம் தேதிக்குள் தமிழகத்தில் காவிரி தொடர்பான போராட்டங்களை நிறுத்த வேண்டும்.ஏப்ரல் 16க்கு பிறகும் போராட்டம் தொடர்ந்தால் 16ம் தேதிக்கு பிறகு,தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம் என்றார்.
ஏற்கனவே,கமல்ஹாசன்,ரஜினிகாந்த் ஆகியோர் காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு எதிராக கருத்து கூறியுள்ளதால் அவர்கள் படங்களை கர்நாடகாவில்,வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.