• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் அறிவிப்பு எதிரொலி, குறைந்தது மூங்கில் தடுப்பு விற்பனை.

March 15, 2016 வெங்கி சதீஷ்

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் மூங்கில் வளையங்களைப் பார்த்தபோது ரம்மியமாக இருந்தது. அது குறித்து விசாரிக்கச் சென்ற போதுதான் அதில் இருந்த ஒரு சோகமும் புரியவந்தது.

பரம்பரை பரம்பரையாக மூங்கில் தொழில் செய்து வரும் வெங்கடேஷ் என்பவரைச் சந்தித்த போது அவர் தான் முதலில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் மூங்கில் தட்டிகள் செய்து வந்ததாகவும், ஆனால் நாளடைவில் துடியலூருக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

சமீப காலமாக தனக்கு மூங்கில் மூலம் செய்யப்பட்ட புதிய செடிகளுக்கான தடுப்பு அதிகளவு விற்பனையானது எனவும் அதுவும் குறிப்பாக தலைவர்கள் பிறந்தநாள் முதல் அனைத்து நாட்களுக்கும் மரக்கன்று நடுவது ஒரு பேஷனாக இருந்தது.

அதனால் அந்த மரக்கன்றைச் சுற்றி மறைப்பு வைக்க எங்களது பிரம்பால் செய்யப்பட்ட மறைப்பை வாங்கிச்சென்றனர். ஆனால் தற்போது தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் தலைவர்கள் யாரும் விழா எடுக்கக்கூடாது என நடைமுறை உள்ளது.

எனவே எங்களுக்குச் செடி மறைப்பு தட்டி விற்பனை குறைந்தது. ஆனால் தற்போது வெயில் அதிகளவு இருப்பதால் மூங்கிலால் செய்யப்படும் திரை மறைப்பை வாங்கிச்செல்கின்றனர். அதன் மூலம் காற்று குளிர்ச்சியாக வரும்.

ஆனால் மழை நீரோ வெயிலோ வர வாய்ப்பே இல்லை. அதனால் அதிகளவில் தற்போது மூங்கில் திரைகள் அதிகளவில் விற்பனையாகிறது. அதன் மூலம் வருவாய் குறைவு சரிசெய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க