• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவுக்கு இருக்கறது கூட ரஜினி, கமலுக்கு இல்லை – பிரபல கன்னட நடிகர்

April 12, 2018 kalakkalcinema.com

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.தென்னிந்திய நடிகர் சங்கமும் அறவழி போராட்டம் நடத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தது.

இதனையடுத்து அதே தினத்தில் சிம்பு செய்தியாளர்களை சந்தித்து அரசியல்வாதிகளால் தான் பிரச்சனை,அவர்கள் இல்லமால் இரு மாநில மக்களும் பேசி இதில் தீர்வு காண வேண்டும்.கர்நாடக மக்களும் தாய்மார்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என கூறியிருந்தார்.

சிம்புவின் இந்த பேச்சுக்கு கர்நாடக மக்களிடமும் தமிழக மக்களிடமும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்த வேலையில் கன்னட நடிகரான ஆனந்த் ராக்,நான் தமிழகர்களுக்கு எதிரானவன் இல்லை, தமிழகர்கள் நல்லவர்கள்,மென்மையானவர்கள்.

சிம்பு காவிரி விவகாரம் பற்றி பேசியிருந்தது சரியானது, சிம்புவிடம் இருக்கும் முதிர்ச்சி கூட ரஜினி, கமலிடம் இல்லை.இருவருமே பழைய அரசியல் கட்சிகளின் பாணியை பின்பற்றுகிறார்கள்.அது எனக்கு அதிர்ச்சியளித்தது.

கூட்டாட்சி நாடான இந்தியாவில் ஒருவருக்கொருவர் இடையே ஒத்துழைப்பு அவசியம்,தமிழகத்துக்கு அது தெரியவில்லை,நாம் தான் சொல்லி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க