April 11, 2018
தண்டோரா குழு
நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி ஐஐடியில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 12)நாளை தமிழகம் வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வரும் மோடி,அங்கிருந் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிடுகிறார்.
பின்னர்,ஹெலிஹாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து காரில் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் சென்று,அங்கு நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.இந்நிலையில்,சென்னை ஐஐடியில் நாளை பிற்பகல் செய்தியாளர்களை மோடி சந்திக்க உள்ளார்.தமிழகத்தில் செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.