April 11, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சக்திசேனா அமைப்பினர் இன்று(ஏப் 11)ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக சக்தி சேனா அமைப்பின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய சக்தி சேனா அமைப்பினர் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசிற்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை குறைத்துக்கொள்ளவிட்டால் மிக பெரிய அளவில் சக்தி சேனா அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர்.