• Download mobile app
13 Oct 2025, MondayEdition - 3533
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரித்து மேய்ந்த சாம் பில்லிங், கொல்கத்தாவை வென்று சாதனைப் படைத்த சிஎஸ்கே!!

April 11, 2018 tamilsamayam.com

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல்., தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர்கொண்டது.

இதனிடையே, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தால், இன்றைய போட்டி ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் நடைபெறுமா என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். இதன்பின் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்ட ன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ரசல் சிக்சராக பறக்கவிட்டார். கடைசி வரை நிலைத்து நின்ற ரசல், 11 சிக்சர் 1 பவுண்டரி என மொத்தமாக 88 ரன்கள் அடித்து கைகொடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

இதன்பின் களமிறங்கிய சென்னை அணியில், ஓபனிங் பேட்ஸ்மேன்களான வாட்சன் மற்றும் ராய்டு தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கினர். வாட்சன் 42 ரன்களிலும், ராய்டு 39 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் ரெய்னா 14, தோனி 25 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்த நிலையில், மறுபுறம் சாம் பில்லிங் பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய பில்லிங் 23 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய பிராவோ மற்றும் ஜடேஜாசிறப்பாக விளையாடி 19.5 ஓவரில் சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கை எட்டச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், 202 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனையையும் சென்னை அணி நிகழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க