• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல்., : கறுப்பு சட்டை அணிந்தால் அனுமதி இல்லை!

April 10, 2018 tamilsamayam.com

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் கறுப்பு சட்டை அணிந்துவருபவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் வரும் நேற்று துவங்கியது.

இதில் மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி தனது பழைய எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக சென்னையில் நடக்கும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஐபிஎல்., போட்டியை நடத்துவது திசை திருப்பும் செயலாகும் என தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், சென்னையில் டி-20 போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் கறுப்பு சட்டை அணிந்து வரும் ரசிகர்களுக்கு சென்னை ஐபிஎல் போட்டியை காண அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுதும் ரகசிய காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க