• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிக்கு மிரட்டலான வில்லனாக பாலிவுட் நடிகர் !

April 9, 2018 தண்டோரா குழு

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு   அனிருத் இசையமைக்கவுள்ளார். இதுமட்டுமின்றி இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதைபோல்,இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன், த்ரிஷா, அஞ்சலி, நயன்தாரா ஆகிய 4 நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறதாம். இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை நவாஸுதினுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க