April 9, 2018
தண்டோரா குழு
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற பெயரில் அமைப்பை இயக்குநர் பாரதிராஜா தொடங்கினார்.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற பெயரில் அமைப்பு ஒன்று துவக்குவதாக இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர் செல்வமணி கூட்டாக அறிவித்துள்ளனர்.
பின்னர் செய்தியார்களிடம் பேசிய இயக்குநர் பாரதி ராஜா,
பேரவையில் இருப்பவர்கள் அரசியல் சாராமல் இருக்க வேண்டும். தமிழனாக குரல் கொடுக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் நிலத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.
துக்கவீட்டில் கொண்டாட்டம் தேவையா? ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது , தங்கர்பச்சான், வி.சேகர், அமீர், ராம், வெற்றிமாறன், வ.கவுதமன் ஆகியோர் உடனிருந்தனர்.