April 7, 2018
தண்டோரா குழு
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பிறப்பித்தார். 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக அவர் பதவியில் இருப்பார். கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா துணை வேந்தராக நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமாளித்துள்ளார்
இது தொடர்பாக அவர் ,
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டும் நடந்துள்ளது. தேடுதல் குழு பரிந்துரை அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். துணை வேந்தர் நியமனத்தில் எந்த வித அரசியல் தலையீடும் இல்லை. கல்வி தகுதியின் அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 3 பேரில் சூரப்பா மட்டுமே பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தேவராஜ் உயிரியலிலும், பொன்னுசாமி கணிதத்திலும் முனைவே பெற்றிருந்தனர்.அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகதிற்கு துணை வேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் வேண்டாம். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார் என ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.