April 7, 2018
தண்டோரா குழு
மான் வேட்டையாடியதாக பாலிவுட் நடிகா் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மான்கள் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தனக்கு ஜாமீன் வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று இந்த ஜாமீன் மனு மீதான வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிபதிகள், சல்மானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.