April 6, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து,புரட்சிகர மாணவர் முன்னணியினர் கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை இன்று(ஏப் 6)முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புரட்சிகர மாணவர் முன்னணி, மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கோவை பந்தைய சாலை பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,போலீஸாரின் தடையை மீறி உள்ளே செல்ல முயன்ற 50 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.அப்போது பேசிய அவர்கள் தமிழகம் கர்நாடத்திற்கு தண்ணீர் வழங்கி கொண்டிருந்தது, தற்போது கர்நாடகாவிடம் தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக மத்திய அரசு தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தனி தமிழ்நாடு வலியுறுத்தியும் கோசங்களை எழுப்பினர்.