April 6, 2018
தண்டோரா குழு
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று பிறப்பித்துள்ளார்.கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா துணை வேந்தராக நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை வேந்தர் நியமனம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து,
இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான்
ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை.
துணைவேந்தர் பதவிக்குமா
ஒரு தமிழருக்குத் தகுதியில்லை?
இதுபோன்ற செயல்களெல்லாம்
தமிழகத்தைத்
தனிமைப்படுத்தவா?
தனிப்படுத்தவா?
இவ்வாறு கூறியுள்ளார்.