April 6, 2018
தண்டோரா குழு
நடிகர் சல்மான்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது ஜோத்பூர் நீதிமன்றம்.
கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் பகுதியில் “ஹம் சாத் சாத் ஹே“ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகா் சல்மான் கான் 2 மான்களை சுட்டுக் கொன்றதாகவும், அவருடன் துணை நடிகா்கள், நடிகைகள் உடனிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து நடிகா்கள் சல்மான்கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் 20 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி எனக் கூறி ஐந்தாண்டு சிறை தண்டனை அளித்து ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும்,சைஃப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இதனைத்தொடர்ந்து நடிகர் சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு ஜாமீன் கேட்டு பின்னர் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை)நடக்கிருந்த நிலையில், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது ஜோத்பூர் நீதிமன்றம்.