April 5, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்திய அரசு பணிந்துவிட வேண்டாம் என கார்நாடக முதல்வர் சித்தராமய்யா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடித்தி வருகின்றனர்.இந்நிலையில்,இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது,மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கடிதம் எழுதி உள்ளார்.
அதில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிய வேண்டாம்.உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்திய அரசு பணிந்துவிட வேண்டாம்.நதிநீர் பங்கீட்டிற்கு என ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது எனக் கூறியுள்ளார்.