தமிழில் தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான உருவெடுத்துள்ளார் அனிருத்.
தமிழில் விஜய்,அஜித்,தனுஷ்,விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர் அடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்நிலையில்,அனிருத் முதன்முறையாக லண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.
ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் லண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிருத் முதன்முறையாக நடத்துகிறார்.இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது.
ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த இசைநிகழ்ச்சி Gig Style Show பாணியில் நடைபெறவிருக்கிறது.இந்திய இசைக்கலைஞர் ஒருவர் இதுபோன்ற வகையில் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது இது தான் முதன்முறையாகும்.
அதைபோல்,ஜுன் 17 ஆம் தேதியன்று இசையமைப்பாளர் அனிருத் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் Zenith என்னுமிடத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.இங்கு இதுவரை எந்த தமிழ் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதில்லை. இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்