April 5, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து கோவை வடகோவை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை மறித்து தி.மு.க.வினர் இன்று(ஏப் 5)போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.இந்த போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.