April 5, 2018
தண்டோரா குழு
சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து,சென்னை மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.மேலும்,காவிரி வாரியத்துக்காக ஸ்டாலினுடன் மறியலில் ஈடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.