April 4, 2018
தண்டோரா குழு
இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்னை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்னை என காவிரி விவகாரம் தொடர்பாக இயக்குநர் சசிகுமார் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள்,அமைப்புகள்,மாணவர்கள்,இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கருத்து தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்னை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்னை.காவிரி மேலாண்மை வாரியம் அமைவது தான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு.உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை…?