April 4, 2018
தண்டோரா குழு
காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம்என நடிகர் விவேக் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காவிரி விவகார போராட்டம் தொடர்பாக நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம். Success depends on the strong will of students n youth! Decide. எனக் கூறியுள்ளார்.