April 4, 2018
தண்டோரா குழு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆளும் அதிமுக சார்பிலும், நேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
இதற்கிடையில்,டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்றுசந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தால், தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆளுநர் தமிழகம் திரும்பினார்.
இதையடுத்து, தமிழகம் திரும்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை சந்திக்க உள்ளார்.அப்போது, காவிரி விவகாரம் குறித்தும், நீண்டகாலமாக சிறையில் உள்ள கைதிகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழவை முன்னிட்டு விடுவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.