April 4, 2018
தண்டோரா குழு
அதிமுகவின் ஒருநாள் உண்ணாவிரதத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று நடைபெறவுள்ள மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசன் நேற்று திருச்சி வந்தடைந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
“காவிரி பிரச்னைக்கான தீர்வு சொல்லும் கூட்டமாக இந்த திருச்சி பொதுக்கூட்டம் அமையும். அதிமுகவின் ஒரு நாள் உண்ணாவிரதத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை மத்திய அரசின் எடுபிடி போல் மாநில அரசு செயல்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நாங்கள் நம்பினோம். காவிரி விவகாரத்தில் 2016ம் ஆண்டு நடந்த நாடகமே தற்போதும் நடப்பதாக தோன்றுகிறது”. இவ்வாறு பேசினார்.