காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்ற மருந்துகடைகள் அடைப்பு போராட்டத்தால் 300 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக மருந்துகடை சங்கத்தின் பொதுசெயலாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, மருந்துகடை சங்கத்தின் பொதுசெயலாளர் செல்வம்,
தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டதாகவும்,300 கோடி ரூபாய் வரை இதனால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்.மேலும் வருகிற ஐந்தாம் தேதி திமுக அறிவித்து உள்ள போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது எனவும்,ஏற்கனவே இன்று நடைபெற்ற போராட்டத்தால் பல கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் இன்றே தங்களது ஆதரவை காவேரி விவகாரத்திற்காக தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறினார்.மேலும்,மருந்து கடைகள் இன்று அடைத்து இருந்தாலும் அத்யாவசிய தேவைக்கான மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்