• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது !

April 2, 2018 தண்டோரா குழு

சென்னை எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி உள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது.கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து தடை நீங்கி இரு அணிகளும் இந்த சீசனில் களமிறங்கவுள்ளது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் ஆடுகிறது. இந்நிலையில்,சென்னை எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டு வருகிறது.டிக்கெட் விற்பனை நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரையும்,பின்னர் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செய்யப்படும். டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

 

மேலும் படிக்க