April 2, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையில் பத்திரிகையாளர்கள் இன்று(ஏப் 2)மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி கோவையில் பத்திரிகையாளர்கள் இன்று ஒருநாள் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்ட 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறித்தி கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டது. பத்திரிகையாளர்களின் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.