April 2, 2018
தண்டோரா குழு
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக தொண்டர் ரவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் மார்ச் 31ம் தேதி நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்து மேடையை நோக்கி ஓடி வந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.