March 31, 2018
தண்டோரா குழு
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.
எனினும் உச்ச நீதிமன்றம் அளித்த கெடு இரண்டு நாட்களுக்கு முன்பு முடிந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படுவில்லை.
இதையடுத்து,பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாய அமைப்புகளும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காவிரி உரிமைக்காகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை மெரினாவில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதில் 4 பெண்கள் உள்பட 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.