• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது – ரஜினிகாந்த்

March 31, 2018 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால் அப்பகுதி குழந்தைகள் மற்றும் மக்கள் சுவாசக்கோளாறு, ரத்தசோகை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குடிநீரும் முற்றிலும் மாசடைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதையடுத்து, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 47 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இப்போராட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று  47 நாட்களாக  அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க