March 31, 2018
தண்டோரா குழு
கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் வெளிவந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டார்.
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் கடந்த 20ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.இதையொட்டி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா தஞ்சையில் தமது கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சசிகலா, அதன்பின் தஞ்சை, உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டார்.
சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பரோல் முடிவதற்கு, மூன்று நாட்களுக்கு முன்பே சசிகலா சிறைக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.