March 31, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.3ம் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தமிழக எம்பிக்களும் நாடாளுமன்றத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய கெடு நேற்றுடன் முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்.3ம் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.