• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் மருந்து கடைகள் ஏப்ரல் 2ஆம் தேதி மூடல்

March 30, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க பொதுச்செயலர் செல்வன் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தமிழக எம்பிக்களும் நாடாளுமன்றத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய கெடு நேற்றுடன்  முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க பொதுச்செயலர் செல்வன் அறிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்றும்,அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் செயல்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க