March 30, 2018
தண்டோரா குழு
பொள்ளாச்சி எம்.பி.மகேந்திரனுக்கு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மணி என்பவர் எலி மருந்தை கொரியர் மூலம் அனுப்பி வைத்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த சமூக ஆர்வலரான பெரியார் மணி, பொள்ளாச்சி எம்பி மகேந்திரனுக்கு எலி மருந்து அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டார். தனியார் கொரியர் மூலம் எலி மருந்துடன் தனது எதிர்ப்பு கருத்து அடங்கிய ஒரு கடிதத்தை இணைத்து அனுப்பி நூதன போராட்டம் மேற்கொண்டார்.
அவர் அனுப்பிய அந்தக்கடித்ததில்,
“வணக்கம், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுள் ஒருவராக நான் வைக்கும் கோரிக்கை, தங்கள் கட்சி சார்பாக 37 எம்பிக்கள் இருந்தும் தமிழக விவசாயிகளின் பல வருட பிரச்னைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட நடைமுறைப்ப்டுத்த முடியவில்லை. ராஜினாமா செய்யாமல் தற்கொலை செய்வோம் என்று தங்கள் கட்சி நவநீதகிருஷ்ணன் பேசியது வரவேற்கத்தக்கது. 37பேரும் தற்கொலை செய்தாவது மக்கள் பிரச்னையை தீர்க்கவும்.தங்களுக்கு உதவும் நோக்கில் எலி மருந்து அனுப்புகிறேன் நன்றி” எனக் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.