• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இப்படி செய்பவர்கள் என் ரசிகர்களே இல்லை – அஜீத்

March 30, 2018 tamilsamayam.com

மற்ற நடிகர்களை கிண்டல் செய்பவர்கள் என் ரசிகர்களை இல்லை என்று நடிகர் அஜீத் அதிரடியாக கூறியுள்ளார்.

நடிகர் அஜீத் கோலிவுட் சினிமாவில் வசூல் நாயகனாக இருந்து வருகிறார். இவர் எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அவர் மீடியாவுக்கு எப்போதாவதுதான் பேட்டி தருவார். அதிலும் ‘பில்லா’ படத்திற்கு பிறகு எந்த மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பது இல்லை என்று முடிவு செய்திருந்தார். தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று யாருக்கும் தொந்தரவு தராமல் ஒதுங்கயே இருப்பார்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் நடிகர் அஜீத் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘‘மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் உங்கள் ரசிகர்கள் பிரச்னை செய்கிறார்களே என்று கேட்டதற்கு நடிகர் அஜீத், ‘‘இந்த மாதிரி செய்பவர்கள் என் ரசிகர்களே இல்லை. என் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு மற்ற நடிகர்களை கிண்டல் செய்வதோ, மோசமாக விமர்சிப்பதோ செய்யாதீர்கள், அவர்கள் ரசிகர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க