• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவரி பிரச்சனையில் மத்திய அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது – ஜி.கே.வாசன்

March 30, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஏப் 2 ஆம் தேதி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“காவிரி மேலாண்மை அமைக்காததை கண்டித்து திருச்சியில் நாளை காலை 11 மணிக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் அவசர கூட்டம் தன்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது.

காவரி பிரச்சனையில் மத்திய அரசு நம்பிக்கை துரோகம் செய்து உள்ளதாக குற்றம்சாட்டிய அவர் மத்திய அரசு,கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டதாகவும் கூறினார்.தமிழக விவசாயிகள் இந்திய விவசாயிகள் என்ற உணர்வு தேசிய கட்சிகளுக்கு ஏற்பட வேண்டும் என கேட்டு கொண்ட அவர் தேசிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது காவிரி பிரச்சனையில் வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் அரசியல் சாயம் பூசி கொண்டு தான் கடந்த காலங்களிலும் இருந்து வந்ததாகவும்,காவிரி  பிரச்சனை தொடர்பாக ஏப்ரல் 1 ஆம் தேதி விவசாய சங்கங்களை சந்திக்க உள்ளதாக கூறினார்”.

மேலும் படிக்க